நெடுவெளியாய் நீண்ட ஒரு வருடம்.......!

பெரிதாகிப் பார்க்க படத்தில் சொடுக்குங்கள்வானத்து சூரியன் எம் வாசல் வர மறந்ததென்ன?
வண்ண மலர்கள் எமக்கு வாசம் தர மறுத்ததென்ன?
வானவில்லாய் வனப்புக் காட்டிய எம் வாழ்க்கை
வர்ணம் இழந்து போனதென்ன?
ஆண்டொன்றாய் அழுது துடிக்கின்றோம்
மீண்டு நீங்கள் வரவில்லை
எமக்கு மீட்சி எதுவுமில்லை
ஒன்றாய் இருந்து ஒற்றுமையாய் வாழ்ந்து
சிரித்து மகிழ்ந்து கதையாடிய காலமெல்லாம்
காற்றாய்ப் போக கலங்குகின்றோம் ஜயா!
அன்பாகப் பேசி அறிவுரைகள் கூறி ஆற்றுப்படுத்த
யாருமேயில்லாத இடைவெளி இங்கு
நெடுவெளியாய் நீண்டு போனதய்யா!
ஊருக்குள் ஒரு உதாரணபுருசனாக
உயர்ந்து நிற்கும் உங்கள் மகத்துவத்தை
எங்கள் மனங்களில் நிறைத்தபடி வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக!


பெரிதாகக் காண படத்தின் மேல் கிளிக் செய்க

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home







உள்ளடக்கம்

உள்ளடக்கங்களை முழு அளவில் காணப் அவற்றின் மேல் அழுத்துங்கள்